சசிகலா குடும்பத்தில் தீராத சிக்கல் - தினகரனை குறிவைக்கும் திவாகரன்.!

sasikala divakaran dhinakaran ammk
By Jon Mar 25, 2021 11:44 AM GMT
Report

தினகரனுக்கு எதிராக சசிகலாவின் சகோதரர் திவாகரன் தேர்தல் வியூகம் வகுத்துள்ளது அமமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியல் களத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சசிகலாவின் வருகை காலப்போக்கில் பரபரப்பு இல்லாமல் போனது. நிச்சயம் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் எனக் கூறியவர் அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்வதாக அறிவித்ததால் தினகரன் உட்பட பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதன் பிறகு தினகரன் தேமுதிக, ஓவைசி, எஸ்.டி.பி.ஐ உடன் கூட்டணி அமைத்துள்ளார். ஏற்கனவே குடும்ப பிரச்னை ஒருபுறம், தேர்தல் களம் மறுபுறம் என மல்லுக்கட்டி வரும் தினகரனுக்கு கூடுதல் அழுத்தத்தை தருகிறாராம் சசிகலா சகோதரர் திவாகரன். சசிகலா சிறைக்கு சென்ற பிறகு திவாகரன் தனியாக அண்ணா திராவிட கழகம் என்கிற தனி கட்சியை ஆரம்பித்திருந்தார்.

திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் மதுரை வடக்கு தொகுதியில் வசந்தகுமார் என்பவரை களமிறக்கியுள்ளது. இவர் தினகரனின் தீவிர விசுவாசி. அதே தொகுதியில்தான் அமமுக சார்பில் ஜெயபால் போட்டியிடுகிறார். திமுக சார்பில் தளபதியும், பாஜக சார்பில் சரவணனும் களம் காண்கின்றனர். தினகரனுக்கு நெருக்கடி கொடுக்கவே அவருடைய விசுவாசியை தன் கட்சி சார்பில் திவாகரன் வேட்பாளராக களமிறக்கியுள்ளார் எனத் தெரிகிறது.