சசிகலாவைப் போல தினகரனும் நல்ல முடிவை எடுப்பார் - பாஜக பொறுப்பாளர் ரவி

sasikala bjp dhinakaran
By Jon Mar 05, 2021 12:30 PM GMT
Report

சசிகலாவை போல தினகரன் அவர்களும் நல்ல முடிவை எடுப்பார் என பாஜக பொறுப்பாளர் ரவி தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் ஆட்சி தொடர சசிகலா போல் டி.டி.வி.தினகரனும் நல்ல முடிவை எடுப்பார் என நம்புவதாக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சிடி ரவி தெரிவித்துள்ளார்.

தொகுதி பங்கீடு குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலில், பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, நிர்வாகிகளுடன் கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

அதன் பின்னர் பேசிய அவர், அரசியலில் இருந்து விலகும் சசிகலாவின் இந்த முடிவை பா.ஜ.க. வரவேற்பதாக கூறினார்.