சசிகலாவுக்கு கொரோனா பாதிப்பில்லை! பரிசோதனையில் தகவல்

corona madurai chenai
By Jon Jan 21, 2021 06:22 PM GMT
Report

  சசிகலாவுக்கு எடுக்கப்பட்டு RT-PCR மற்றும் RAPID பரிசோதனையில் கொரோனா பாதிப்பில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. சிறையில் இருந்த சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பவ்ரிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

வருகிற 27ம் தேதி விடுதலையாக உள்ள சசிகலாவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என அவரது சகோதரன் திவாகரன் சந்தேகம் தெரிவித்துள்ளார். மேலும் சசிகலாவுக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்துள்ள நிலையில் சிறையில் சரியான சிகிச்சை தரவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

அதாவது, நேற்று மாலை மூச்சுத்திணறல் ஏற்பட்ட பிறகுதான் சிறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர், பரப்பன அக்ரஹா சிறை மருத்துவமனையில் சாதாரண எக்ஸ்ரே மட்டுமே எடுத்து பார்த்துள்ளனர். தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிடி ஸ்கேன் எடுக்க கோர்ட் அனுமதி தேவை என்கிறார் என கூறினார்.

மேலும் தங்களுக்கு துரோகம் மேல் துரோகம் நடந்து வருவதாகவும், பணம் எதுவரை பாய்ந்தது என தெரியவில்லை எனவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.