சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

jail political admk
By Jon Jan 21, 2021 06:06 PM GMT
Report

சசிகலாவுக்கு காரோண தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். சசிகலா அவர்கள் சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு அக்ரஹார சிறையில் 4 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வந்தார்.

இந்த நிலையில் வருகிற ஜனவரி 27ம் தேதி அவர் விடுதலை ஆகவுள்ளதாக தகவல் வெளியாகின. விடுதலைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் சசிகலாவுக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு பெங்களூரு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவு நெகடிவ் என வந்தது.

அதனை தொடர்ந்து அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று மீண்டும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது அதில் சசிகலாவுக்கு காரோண தோற்று உறுதி செய்யப்பட்டதாக மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

முன்னதாக சசிகலாவுக்கு சி.டி ஸ்கேன் எடுத்து பார்த்ததில் அவருக்கு நுரையீரல் தோற்று இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.