சென்னை வருகை தரும் சசிகலா: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

government ilavarasi sudhakaran
By Jon Feb 10, 2021 02:45 PM GMT
Report

சசிகலா சென்னை வருகையை அடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனையை அனுபவித்து விட்டு, விடுதலையான சசிகலா, இன்று (திங்கட்கிழமை) சென்னை திரும்புகிறார்.

பெங்களூருவில் இருந்து காரில் சென்னை வரும் அவருக்கு வழி நெடுக வரவேற்பு கொடுக்க அ.ம.மு.க. கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சசிகலா தியாகராயநகருக்கு செல்லும் வழி பற்றிய தகவல் போலீசாருக்கு அ.ம.மு.க. கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் சசிகலா அ.தி.மு.க. தலைமை அலுவலகம் மற்றும் ஜெயலலிதா நினைவிடம் செல்வார் என்ற தகவல் இல்லை.

இருந்தாலும் திடீரென்று அந்த 2 இடங்களுக்கும் சசிகலா சென்றால், அதை தடுத்து நிறுத்த அந்த 2 பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.