சசிகலாவுக்கு கார் கொடுத்த அந்த நபர் எங்கு போட்டியிடுகிறார் தெரியுமா? அதுவும் அமமுக சார்பாக
சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை முடிந்து விடுதலையான சசிகலா, சாலை மார்க்கமாக 24 மணிநேர பயணத்துக்கு பின்னர் சென்னை வந்தடைந்தார். அன்றைய தினம் தமிழக போலீஸ் சார்பில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன, அதிமுக கொடியுடன் வந்தவருக்கு தமிழக எல்லையிலேயே நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
அப்போது தான், திருவள்ளூர் மாவட்ட அதிமுக துணை செயலாளரான தட்சிணாமூர்த்தியின் காரில் ஏறிக்கொண்டார். அதிமுக நிர்வாகி என்பதால், அந்தக் காரில், அதிமுக கொடியை பயன்படுத்த எந்த தடையும் இல்லை, எனவே அந்த காரில் பயணித்து சென்னை வந்தடைந்தார்.
இந்த விடயம் தெரியவரவே, தட்சிணாமூர்த்தியை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி தலைமை உத்தரவிட்டது. இப்போது அதே தட்சிணாமூர்த்தி அமமுக சார்பில் மாதவரத்தில் போட்டியிடுகிறார், உண்மையில் சசிகலாவுக்கு கார் தந்தால் மட்டுமே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
கட்சியில் வாரிசுகளுக்கு பதவி தருகிறார் என்று திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் மாதவரம் மூர்த்தி மீது, தட்சிணாமூர்த்தி ஏற்கனவே கடும் அதிருப்தியில் இருந்தாராம்.
இதுதவிர செம்மரக்கடத்தல் புள்ளிகளின் ஆளுங்கட்சி புள்ளிகள் மாறி வருகிறார்கள் என்று நேருக்குநேராகவே குற்றம்சாட்டியதும் காரணமாம்.