சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குனர் பாரதிராஜா
சசிகலா அவர்கள் குணமடைய வாழ்த்துக்கள் தெரிவித்தார் இயக்குனர் இமயம் பாரதிராஜா. சசிகலா அவர்கள் வருகிற ஜனவரி 27ம் தேதி விடுதலையாக அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு பெங்களூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து அவருக்கு நுரையீரல் தொற்று இருப்பது செய்யப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றும் உறுதியானது. இந்த நிலையில் சசிகலா விரைவில் குணமடைய வேண்டும் என திமுக எம்பி கனிமொழி சமீபத்தில் வாழ்த்து தெரிவித்தார் என்பதை பார்த்தோம்.
அந்த வகையில் தற்போது பிரபல இயக்குனர் பாரதிராஜாவும் தனது டுவிட்டரில் சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: கொரானா பாதிப்பால் உடல் நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மதிப்புக்குரிய திருமதி.
சசிகலா அவர்கள் பூரண நலம்பெற வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.