அரசியலில் இருந்து விலகுவதாக திடீரென அறிக்கை வெளியிட்ட சசிகலா
சசிகலா அவர்கள் அரசியலில் இருந்து விலகுவதாக வெளியிட்ட அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களது தோழியான சசிகலா அவர்கள் சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி கடந்த ஜனவரி மாதம் விடுதலையானார்.
அதனையடுத்து அவர் அரசியல் வாழ்கையில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “அம்மா அவர்கள் உயிருடன் இருந்தபோது எப்படி அவர் எண்ணத்தை செயல்படுத்து சகோதரியாக இருந்தேனோ அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன், நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை.
புரட்சி தலைவியின் அன்பு தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் என்றேன்றும் நன்றியுடன் இருப்பேன் நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய நான் என்றும் தெய்வமாக வணங்கும் என் அக்கா புரட்சித்தலைவியிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்து கொண்டு இருப்பேன்” என தெரிவித்துள்ளார்.
