ஸ்கெட்ச் போடும் சசிகலா ? ஒரம் கட்டப்படும் டிடிவிதினகரன்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுகவில் குழப்பங்கள் அதிகமானது ஒபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கி ஓபிஎஸ் இபிஎஸ் இணைப்பு வரை நாம் அறிந்ததே .
அதே சமயம் ஓபிஎஸ் ஈபிஎஸ் இணைப்புக்கு பிறகு சசிகலாவிற்கு ஆதரவு கொடுத்து வந்தவர் டிடிவி தினகரன் சசிலா சிறையிலிருந்து வந்த பிறகும் தனது ஆதரவை கொடுத்து வரும் நிலையில் சசிலா டிடிவி தினகரனை ஒதுக்கி வைக்க முடுவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சசிகலா- டிடிவி தினகரன் ஆகியோர் இடையே பனிப்போர் சமீபகாலமாக உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கு முக்கிய காரணம், டிடிவிடம் இருந்த மிக முக்கியமான பணப்பொறுப்பு காமெடி நடிகர் பெயரில் உள்ள நபருக்கு சென்று விட்டதாம். இதனால் டிடிவி தினகரன் கடும் அப்செட் அடைந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, சசிகலா- டிடிவி இருவருக்கும் இடையே மோதல் போக்கு ஆரம்பித்ததாக கூறப்படுகிறது , இந்த நிலையில் கடந்த சில நாட்களாகம் டிடிவியின் செயல்பாடு சசிகலா விரும்பவைல்லை என்று கூறப்படுகிறது.

குறிப்பாக தான் சொல்வதை சசிகலா கேட்க வேண்டும் என்று டிடிவி தினகரன் நினைத்தாராம். ஆனால், தற்போது டிடிவி சொல்வதை எதையும் சசிகலா கேட்பது இல்லையாம். மேலும் சசிகலாவின் சகோதரர் திவாகரன், டிடிவி தினகரனைநீக்க வேண்டும் என்று முடிவோடு சசிகலா இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாகவே டிடிவி தினகரன் தொண்டர்களின் துக்க நிகழ்ச்சிக்கு டிடிவி தினகரன் செல்வது கிடையாது. ஆனால் தற்போது நெருக்கடி அதிகரித்துள்ளதால், டெல்டா மாவட்டத்தில் நடந்த துக்க நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டுள்ளார்.
இதை சசிகலா தரப்பினர் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். அதிமுகவில் தான் இணைய டிடிவி தினகரன் தடையாக இருப்பதாக சசிகலா நினைப்பதாக கூறப்படுகிறது.
மேலும், டிடிவி தினகரன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சசிகலாவுக்கு சென்றுள்ளதாக தெரிகிறது. எனவேதான் டிடிவி தினகரனை நீக்க உள்ளதாக கூறப்படுகிறது.