யாரை பற்றியும் யாரையும் தரக்குறைவாக பேச வேண்டாம்... ஆதரவாளர்களுக்கு சசிகலா அன்பு கட்டளை

politics sasikala admk
By Irumporai Oct 17, 2021 10:25 AM GMT
Report

பொதுக்கூட்டங்களில் யாரையும் தரக்குறைவாக பேச வேண்டாம் என தனது ஆதரவாளர்களுக்கு சசிகலா  கூறியுள்ளார்.

சென்னை ராமாவரம் தோட்டத்தில் அதிமுக பொன்விழா துவக்கநாள் விழா  நடைபெற்றது, இதில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய சசிகலா :

நெருக்கடிகள் என்னைச் சூழ்ந்த போதும் கூட அதிமுகவை ஆட்சியில் அமர்த்தி விட்டுத் தான் சென்றேன். தேர்தலிலிருந்து நான் ஒதுங்கி இருந்தது ஏன் என்று அதிமுகவினருக்குத் தெரியும்.

அதிமுகவைக் காலம் முழுக்க காப்பாற்ற வேண்டியது நமது அனைவரின் பொறுப்பு. அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும். என்னால் அதிமுகவுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடாது என்றுதான் இவ்வளவு நாள் அமைதியாக இருந்தேன்.

நமக்குத்தேவை ஒற்றுமைதான்; நீரடித்து நீர் விலகாது. மக்கள் நலனிலும் தொண்டர்கள் நலனிலும் அக்கறை காட்டாவிட்டால் எந்த பொறுப்பிலிருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள். நாம் ஒன்றாக வேண்டும், அதிமுக வென்றாக வேண்டும் என்றார்.

இந்த நிலையில் சென்னை ராமாவரம் எம்.ஜி.ஆர் தோட்டத்தில் நடந்த அதிமுக பொன்விழா துவக்க நாள் நிகழ்ச்சியில் சசிகலா பங்கேற்ற நிலையில், அவரை மேடையில் வைத்துக்கொண்டே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., குறித்து ஒரு சில நிர்வாகிகள் கடுமையாக விமர்சித்தனர்.

அதைத் தொடர்ந்து இறுதியாக மைக் பிடித்துப் பேசிய சசிகலா, எம்.ஜி.ஆர். வழிவந்த தொண்டர்கள் அடுத்தவர்களை புண்படுத்தக் கூடாது என தாம் நினைப்பதாக தெரிவித்தார். தரக்குறைவாக இதனால் இனி யாரையும் தரக்குறைவாக பேச வேண்டாம் என தனது ஆதரவாளர்களுக்கு அன்புக் கட்டளை பிறப்பித்தார் சசிகலா.

எம்.ஜி.ஆர். எப்போதுமே தானும் ஒரு தொண்டன் தான் என அடிக்கடி கூறுவார் என்றும் இதனால் தொண்டர்களால் இன்று நடத்தப்பட்டுள்ள அதிமுக பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை எண்ணி பெருமைப்படுவதாக தெரிவித்தார்.

மற்றவர்கள் தவறு கட்சிக்கு எள் முனை அளவும் துரோகம் செய்ய தாம் நினைத்ததில்லை எனக் கூறிய சசிகலா, மற்றவர்கள் செய்யும் தவறுகளை நாமும் செய்யக்கூடாது என ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டார்.

முன்னதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அதிமுக தலைமைக்கழக மேலாளர் மகாலிங்கம் குறித்து சசிகலா ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்து பேசியது குறிப்பிடத்தக்கது