சசிகலாவை வரவேற்ற மேலும் ஒரு அதிமுக நிர்வாகி நீக்கம்

tamil jayalalitha karunanidhi
By Jon Jan 30, 2021 10:45 AM GMT
Report

சசிகலா அவர்களை வரவேற்று போஸ்டர் அடித்த மேலும் ஒரு அதிமுக நிர்வாகி நீக்கப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டத்தில் பெரும் கழகத்தை ஏற்படுத்தியுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் கைதான மறைந்த முன்னாள் முதலவர் ஜெயலலிதா வர்களின் தோழியான சசிகலா அவர்கள் சொத்துகுவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத்தண்டனை முடிவுபெற்று கடந்த ஜனவரி 27ம் தேதி விடுதலையானார்.

இருந்தபோது அவருக்கு உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் விக்டோரியா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார். தற்போது அவரது விடுதலையை அதிமுகவினர் பலரும் வரவேற்று வருகின்றனர், இந்த செயல் அதிமுகவினரிடையே பெரும் முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக அதிமுகவின் இந்த தீவிர நடவடிக்கையை கண்டுகொள்ளாத, நெல்லை மாநகர மாவட்டத்தின் இணை செயலாளர் எம்ஜிஆர் மன்றத்தை சேர்ந்த சுப்பிரமணியராஜா சசிகலா விடுதலையை வரவேற்று போஸ்டர் ஒட்டினார். இந்த விவகாரம் அதிமுக கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக சுப்பிரமணியராஜா கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.

அதிமுகவின் இந்த நடவடிக்கை தொண்டர்களிடையெ ஒருவித கலகத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு நிர்வாகி ஒருவர் சசிகலா விடுதலையை வரவேற்று போஸ்டர் ஒட்டியுள்ள விவகாரம் அதிமுகவினரிடையே மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தின், அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி ரா.அண்ணாதுரை திருச்சியின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்களை ஒட்டியிருந்தார். இதனால் அவர் கட்சியின் கொள்கை கோட்பாட்டை மீறியதாகவும், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதாகவும் கூறி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது அதிமுகவின் இந்த நடவடிக்கை தொண்டர்கள் பலரிடம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  


Gallery