ஆயிரம் சொல்லுங்க OPS ‛நியாயமாதான் பேசுவார் -டிடிவி தினகரன் புதிய ட்விஸ்ட்
சிறையிலிருந்து வெளிவந்த சசிகலா அதிமுகவுக்குள் பல மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்தார்.
இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு அரசியல் பிரவேசத்தை மீண்டும் தொடங்கியுள்ளார். அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்திய அவர் அதிமுகவை எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள் என்றார்.
இந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் கலந்து பேசி முடிவெடுப்பார்கள் என கூறியது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளானது.
இந்த நிலையில் ஓ.பிஎஸ் கருத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்:
“தமிழகத்தில் ஜெயலலிதாவின்ஆட்சியைக் கொண்டு வருவதே எங்களது இலக்கு. சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து கூட்டத்தில் முடிவு செய்வோம் என ஓ .பன்னீர்செல்வம் கூறியிருப்பது சரியானதுதான். அவர் எப்போதுமே நியாயமாகத்தான் பேசுவார். அவர் மனதில் பட்ட கருத்தைத் துணிந்து சொல்லியிருக்கிறார்.
இயக்கத்தை மீட்டெடுப்பதற்காகவும், தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை ஏற்படுத்துவதற்காகவும் அமமுக உருவாக்கப்பட்டது. இந்த முயற்சியை எங்களது இறுதி மூச்சு உள்ளவரை தொடர்வோம் எனக் கூறினார்.