அதிமுக கொடியுடன் சென்னை புறப்பட்டார் சசிகலா
அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பெங்களூருவில் இருந்து சென்னை புறப்பட்டுள்ளார் சசிகலா. பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா, கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தீவிர சிகிச்சைக்கு பின்னர் சசிகலா குணமான நிலையில், மருத்துவர்கள் அறிவுரையின் படி பெங்களூருவில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில் இன்று சென்னைக்கு வரவிருக்கிறார், மருத்துவமனையிலிருந்து டிஸ்ஜார்ஜ் ஆகும்போது சசிகலாவின் காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து அமைச்சர்கள் ஜெயக்குமார், சி. வி. சண்முகம் உள்ளிட்டோர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, சசிகலா காரில் அதிமுக கொடியை பொருத்த காவல்துறையினர் தடை விதித்திருந்தனர்.
இந்நிலையில் பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சசிகலா சென்னை புறப்பட்டுள்ளார்.
போலீஸ் தடை விதித்துள்ள நிலையில் சசிகலா காரில் அதிமுக கொடி மீண்டும் பொருத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.