சசிகலாவை விமர்சிக்க வேண்டாம் கட்சியினருக்கு ஓபிஎஸ்,இபிஎஸ் வேண்டுகோள்!
அதிமுகவினர் சசிகலா பற்றி பொதுவெளியில் விமர்சிக்க வேண்டாம் என ஓபிஎஸ்,இபிஎஸ் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக கட்சியிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
தீர்ப்பு வெளியானைதை அடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார்,எஸ்.பி.வேலுமணி,சி.வி சண்முகம் உள்ளிட்டோரும்,மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் சசிகலா பற்றி பொதுவெளியில் இனி யாரும் பேசவோ,விமர்சிக்கவோ வேண்டாம். அவருக்கும் கட்சிக்கும் இனி எந்த தொடர்பும் இல்லை என்று ஆகிவிட்டது.
அவ்வாறு பேசினால், அதனை அவர் சாதகமாக எடுக்கக்கூடும். மேலும், அவரின் கருத்துகளுக்கு பதிலளிக்க வேண்டாம்.
அதேபோல, அதிமுகவின் கொடி, சின்னம் ஆகியவற்றை அவர் தொடர்ந்து பயன்படுத்தினால், நீதிமன்றம் மூலமே அதனை அணுகலாம் என்றும் ஓபிஎஸ், இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.