“யாராலும் என்னை தடுக்க முடியாது” - சசிகலா பேசிய 41வது ஆடியோ வெளியீடு

Sasikala Admk
By Petchi Avudaiappan Jun 14, 2021 05:11 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in அரசியல்
Report

 கட்சியை மீண்டும் நல்ல வழியில் கொண்டு வருவோம் என சசிகலா பேசிய 41வது ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று நடந்த அதிமுக எம்.எல்.ஏ., கூட்டத்தில் சசிகலா உடன் தொலைபேசியில் உரையாடியவர்கள் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

இந்நிலையில் சசிகலா பேசிய 41ஆவது ஆடியோ வெளியாகியுள்ளது.

அதில் கட்சியை மீண்டும் நல்ல வழியில் கொண்டு வருவோம், அதை யாராலும் தடுக்க முடியாது என கூறியுள்ளார்.

மேலும் இதைப்போன்ற சூழலை ஏற்கனவே ஜெயலலிதாவுடன் இருந்த போது பார்த்துள்ளேன். இவர்கள் செய்வது எல்லாம் எனக்கு புதிதாக தெரியவில்லை எனவும் சசிகலா தெரிவித்துள்ளார்.