”துரோகத்தை வேரறுத்துக் களமாட விரைந்து வாருங்கள்” சசிகலாவை வரவேற்று ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு!
கும்பகோணம் அருகே சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக பிரமுகர் சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் ஆகிய பகுதிகளில் சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுக பிரமுகர் மகேந்திரன் என்பவர் அதிமுக கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று சசிகலாவுக்கு ஆதரவாக சுவரொட்டி ஓட்டியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சமீப நாட்களாக மன வேதனையில் இருந்து வரும் அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கடிதங்கள் மூலம் தங்களது எண்ணங்களை சசிகலாவிடம் தெரிவித்து வருகின்றனர். தொண்டர்களின் கடிதங்களுக்கு மதிப்பளித்த சசிகலா தினமும் மன அழுத்தத்தில் இருக்கும். அதிமுகவினர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஆறுதல்களை சொல்லியும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் பேசி வருகிறார்.
சசிகலாவின் தொலைபேசி உரையாடல்களால் கவர்ந்த பல்வேறு மாவட்டங்களில் அதிமுகவினர் வரவேற்பு தெரிவித்து சுவரொட்டிகளை ஒட்டி வரும் நிலையில் தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்பனந்தாள், அணைக்கரை, பந்தநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சசிகலாவை வரவேற்றும் அதிமுகவின் தலமை ஏற்க வேண்டியும் சுவரொட்டிகளை அதிமுகவை சேர்ந்த மகேந்திரன் என்பவர் ஒட்டியுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டப்பட்ட சுவரொட்டியில் ”முயற் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ” என்ற எம்.ஜி.ஆரின் படப் பாடலை அச்சிட்டும்
”துரோகத்தைவேரறுத்துக் களமாட விரைந்து வாருங்கள் காத்திருக்கிறோம்” என்ற வாசகங்களும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.