ஈகோவால் சஞ்சுவின் எதிர்காலத்தை சிதைச்சுட்டிங்க - கொந்தளித்த காங்கிரஸ் எம்.பி

Indian National Congress Indian Cricket Team Sanju Samson
By Karthikraja Jan 19, 2025 05:30 PM GMT
Report

சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் அளிக்கப்படாததற்கு காங்கிரஸ் எம்பி சசிதரூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பை

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இந்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது.

sanju samson

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் கேப்டனாக ரோகித் ஷர்மாவும் துணை கேப்டனாக சுப்மன் கில்லும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சஞ்சு சாம்சன்

இந்த அணியில் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அவருக்கு இடமளிக்கப்படாது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. கடைசியாக ஆடிய 5 T20 போட்டிகளில் சஞ்சு சாம்சன் 3 சதம் அடித்துள்ளார். 

sasi tharoor

இந்நிலையில் சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் அளிக்கப்படாததற்கு கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்பி சசிதரூர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இது சஞ்சு சாம்சனுக்கும் கேரளா கிரிக்கெட் சங்கத்திற்கும் இடையேயான வருத்தமான கதை.

சசி தரூர்

முன்னதாகவே, சையத் முஸ்டாக் அலி மற்றும் விஜய் ஹசாரே தொடர்களுக்கான இடையேயான பயிற்சி கேம்பில் பங்கேற்க மாட்டேன் என்று கேரளா கிரிக்கெட் சங்கத்துக்கு சஞ்சு சாம்சன், கடிதம் எழுதியிருந்தார். ஆனாலும் விஜய் ஹசாரேவுக்கான கேரளா அணியில் இருந்து நீக்கப்பட்டதோடு, இப்போது இந்திய கிரிக்கெட் அணியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

இந்த பேட்ஸ்மென் விஜய் ஹசாரேவில் 212 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்ததோடு, இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாடி சராசரியை 56.66 (தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடைசியாக விளையாடிய போட்டியின் சதத்தையும் சேர்த்து) என்று வைத்துள்ளார்.

இருந்தாலும், தற்போது அவரது எதிர்காலத்தை கிரிக்கெட் சங்க நிர்வாகிகளின் ஈகோ சிதைத்துள்ளது. இந்த ஈகோ விஜய் ஹசாரேவில் கேரளா அணியை காலிறுதிக்கு கூட தகுதி பெற வைக்கவில்லை. இது கவலையாக இல்லையா?" என கூறியுள்ளார்.