வா வாத்தியாரே... நம்ம போலாம்” - மல்லுகட்டும் சார்பட்டா பரம்பரை நடிகர்கள்

SarpattaParambarai idiyaapaparambarai
By Irumporai Aug 10, 2021 07:12 PM GMT
Report

சார்பட்டா பரம்பரை படத்தின் எதிரணியைச் சேர்ந்த நடிகர்கள் ஜி.எம் சுந்தரை ‘ ஷபீர், ஜான் கொக்கன் ஆகியோர் சைக்கிள் ஓட்டிச் செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’ படம் கடந்த மாதம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் சார்பட்டா பாக்ஸிங் பரம்பரையின் பயிற்சியாளர் ரங்கன் வாத்தியாராக பசுபதியாகவும், கபிலனாக ஆர்யாவும் நடித்திருந்தனர்.

இதேபோல் எதிரணியான இடியாப்ப பாக்ஸிங் பரம்பரையில் பயிற்சியாளராக ஜி.எம்.சுந்தர், ‘டான்சிங் ரோஸ்’ ஷபீர், ’வேம்புலி’ ஜான் கொக்கன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற ஆர்யா பசுபதியை சைக்கிளில் ஏற்றிச் செல்லும் காட்சி கடந்த இரு தினங்களாக சமூக வலைத்தளங்களை மீம்ஸ்களாக ஆக்கிரமித்தது.

 நடிகர் ஆர்யா, பசுபதி, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலரும் வரவேற்று இருந்தனர். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இடியாப்ப பரம்பரையின் ஆக்ரோஷமான குத்துச்சண்டை வீரர்களான டான்ஸிங் ரோஸ் ஷபீர், வேம்புலி ஜான் கொக்கன் ஆகியோர் தங்கள் அணியின் துரைக்கண்ணு வாத்தியார் ஜி.எம் சுந்தரை நிஜத்தில் சைக்கிளில் அமர வைத்து ஓட்டிச் செல்லும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது