ஆர்யா படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியீடு..!

Pa Ranjith Arya Sarpatta paramparai சார்பட்டா பரம்பரை
By Petchi Avudaiappan Jul 12, 2021 10:02 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

நடிகர் ஆர்யா நடித்துள்ள சார்பட்டா பரம்பரை படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகிறது.

சென்னையில் 90களில் நடந்த பாக்ஸிங்கை மையமாக வைத்து இயக்குனர் பா.ரஞ்சித், நடிகர் ஆர்யா கூட்டணியில் சார்பட்டா பரம்பரை படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் துஷாரா, கலையரசன், காளி வெங்கட், பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இதில் நடிக்க ஆர்யா கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு 8 பேக் உடற்கட்டுடன் தன்னை தயார்படுத்தியதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சார்பட்டா பரம்பரை ஜூலை 22-ஆம் தேதி ஆன்லைன் ஓட்டி டி தளமான அமேசன் பிரைம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை படத்தின் ட்ரைலர் வெளியாகிறது.