ஜூலை 22 ஆம் தேதி வெளியாகும் "சார்பட்டா பரம்பரை"

Pa Ranjith Arya Sarpatta paramparai
By Petchi Avudaiappan Jul 08, 2021 10:31 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சார்பட்டா பரம்பரை' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

காலா படத்துக்குப் பிறகு பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சார்பட்டா பரம்பரை'. வடசென்னையில் இருக்கும் பாக்ஸர்களை மையப்படுத்திய இந்தக் கதையில் நடிப்பதற்காக ஆர்யா தனது உடலமைப்பை முழுமையாக மாற்றினார்.

படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதனிடையே கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது.

ஜூலை 22 அன்று அமேசான் பிரைம் ஓடிடியில் சார்பட்டா பரம்பரை படம் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.