‘வாத்தியாரே..நாம இப்ப உலக பேமஸ்’ - சார்பட்டா படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்..!

sarpatta parambarai சார்பட்டா பரம்பரை newyorktimes
By Petchi Avudaiappan Aug 30, 2021 03:46 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in திரைப்படம்
Report

 நியூயார்க் டைம்ஸ் சர்வதேச திரைப்பட பட்டியலில் சார்பட்டா பரம்பரை படம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, துஷரா விஜயன்,ஜி.எம்.சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த படம் சார்பட்டா பரம்பரை கடந்த ஜூலை 22 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது.

 வடசென்னையில் இரண்டு பரம்பரைகளுக்கு இடையேயான குத்துச் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் அவசரநிலை காலக்கட்ட அரசியல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்று ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற காட்சி ஒன்று மீம்ஸ் கிரியேட்டர்களின் டெம்பிளேட்டாக மாறியுள்ளது. இந்நிலையில் நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் இணையதளத்தில் ஒளிபரப்பப்பட்ட 5 சர்வதேச திரைப்படங்களின் பட்டியலில் சார்பட்டா பரம்பரை படமும் இடம் பெற்றுள்ளது.

மேலும் இந்த படம் பற்றியும், இயக்குநர் பா.ரஞ்சித் பற்றியும் பெரிய அளவில் பாராட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய திரைப்படம் சார்பட்டா பரம்பரை தான் என்பதும், இதனைத் தவிர The Awakening of the Ants, All Hands on Deck, His House, Arab Blues ஆகிய படங்களும் அந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.