‘’போய் சொல்லுண்ணா நான் யாருன்னு நிரூபிக்கிற நேரம் இது’’: பட்டைய கிளப்பும் சார்பட்டா பரம்பரை ட்ரெய்லர்!
காலா படத்திற்கு பிறகு இயக்குநர் பா.ரஞ்சித் இயக்க்கும் படம் சார்பட்டா பரம்பரை இந்த படம் தொடங்கியதில் இருந்தே சினிமாரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்தன.
இந்த நிலையில் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாய் அமைந்துள்ளது இன்று வெளியாகியுள்ள ட்ரெய்லர்.
குறிப்பாக அந்த ட்ரெய்லரில் வரும் நாமெல்லாம் ஒரு பரம்பரையா இருந்தோம். அதுக்கப்புறம் ரெண்டாச்சி. நாலாச்சி பாக்ஸிங் என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா என்ற வசனம் படத்தின் ஆர்வத்தை தூண்டுகிறது.
அதோடு 8 பேக் வைத்து சண்டையிடும் ஆர்யா, கலையரசன் உள்ளிட்டோர் கவனம் ஈர்க்கின்றனர்.
கடைசியில் ’போய் சொல்லுண்ணா. நான் யாருன்னு எல்லோருக்கும் நிரூபிக்கிற நேரம் இது என ஆர்யா பேசுவது போல் ட்ரைலர் முடிகிறது.
இன்று வெளியான ட்ரெய்லரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். சார்பட்டா பரம்பரை’ வரும் ஜூலை 22 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது.