பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண சுவாமி மறைவு - தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!

M K Stalin Tamil nadu
By Nandhini Aug 14, 2022 10:57 AM GMT
Report

அகில இந்திய வானொலியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி ஓய்வு பெற்ற பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண சுவாமி (87) மும்பையில் நேற்று காலமானார்.

சரோஜ் நாராயண சுவாமி மறைவு

தமிழக மக்களின் 90 காலகட்டங்கள் ‘செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி’ என்ற கம்பீரக் குரலை கேட்காமல் விடியல் விடிந்திருக்காது. அகில இந்திய வானொலியின் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளரான இவர், டெல்லியில் 35 ஆண்டுகள் ஒளிபரப்புத்துறையில் பணியாற்றியுள்ளார்.

இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவிற்கு பலர் சமூகவலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் இரங்கல்  

saroj-narayanswamy-mk-stalin

தமிழக முதலமைச்சர் இரங்கல்

இந்நிலையில், பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண சுவாமி மறைவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த பதிவில், அன்றாடச் செய்திகளின் குரலாக நுழைந்து, வரலாற்றின் குரலாக நிலைத்து நின்றுவிட்டது திருமதி சரோஜ் நாராயண்சுவாமி அவர்களின் குரல்! மறக்கவொண்ணா நிகழ்வுகளோடு பின்னிப் பிணைந்த அக்குரல் நேற்றோடு ஒலிப்பதை நிறுத்திக்கொண்டு விட்டது அறிந்து வேதனையடைந்தேன். எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று பதிவிட்டுள்ளார்.