பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண சுவாமி காலமானார் - ரசிகர்கள் இரங்கல்
Death
By Nandhini
அகில இந்திய வானொலியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி ஓய்வு பெற்ற பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண சுவாமி (87) மும்பையில் நேற்று காலமானார்.
தமிழக அரசு கலைமாமணி விருது
தமிழக மக்களின் 90 காலகட்டங்கள் ‘செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி’ என்ற கம்பீரக் குரலை கேட்காமல் விடியல் விடிந்திருக்காது. அகில இந்திய வானொலியின் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளரான இவர், டெல்லியில் 35 ஆண்டுகள் ஒளிபரப்புத்துறையில் பணியாற்றியுள்ளார்.
இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவிற்கு பலர் சமூகவலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எனக்கு நினைவில்லை.. எனக்குத் தெரியாது.. எனக்கு எதுவுமே தெரியாது...சாட்சியமளிப்பில் பதறிய கோட்டாபய IBC Tamil