முஸ்லிம் என்பதால் சர்ஃபராஸ் கானை அணியில் எடுக்காத கம்பீர் - வெடித்த சர்ச்சை!
சர்ஃபராஸ் கான் இஸ்லாமியர் என்பதால் அவரை கவுதம் கம்பீர் அணியில் சேர்க்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் தொடர்
கிரிக்கெட்டில் இந்திய ஏ அணியும், தென்ஆப்பிரிக்கா ஏ அணியும் 4 நாள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. இந்த தொடர் மொத்தம் 2 போட்டிகளை கொண்டது.
முதல் போட்டி அக்டோபர் 30 முதல் நவம்பர் 2ம் தேதி வரையும், அடுத்த போட்டி நவம்பர் 6 முதல் நவம்பர் 9 ம் தேதி வரையும் நடைபெறவுள்ளது. அதில் ரிஷப் பண்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆயுஷ் மாத்ரே, என் ஜெகதீசன், சாய் சுதர்சன் (துணை கேப்டன்), தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், ஹர்ஷ் துபே, தனுஷ் கோடியான், மானவ் சுதார், அன்சுல் கம்போஜ், யஷ் தாகூர், ஆயுஷ் பதோனி, சரன்ஜ் ஜெயின் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சர்ஃபராஸ் கான்
2வது போட்டிக்கான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2 அணியிலும் சர்ஃபராஸ் கானுக்கு இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ஷமா முகமது தனது எக்ஸ் பக்கத்தில்,
‛‛ சர்ஃபராஸ் கான் தனது குடும்பப்பெயரால் தேர்ந்தெடுக்கப்படவில்லையா! #justasking. இந்த விஷயத்தில் கவுதம் கம்பீர் எத்தகைய நிலைப்பாட்டை கொண்டுள்ளார் என்பது எங்களுக்கு தெரியும்” எனக் குறிப்பிட்டுள்ளார். கவுதம் கம்பீர் பாஜகவில் எம்பியாக இருந்தார்.
அதன்பிறகு தான் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். சர்ஃபராஸ் கான் இஸ்லாமியர் என்பதால் அவரை அணியில் எடுக்காமல் கவுதம் கம்பீர் புறக்கணித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.