‘‘சேலை இந்திய பெண்களின அடையாளம்’’ : ஆவேசமாகி கடிதம் எழுதிய வானதி சீனிவாசன்

delhi saree vanathisrinivasan
By Irumporai Sep 23, 2021 09:05 AM GMT
Report

 பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவியும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் .

அந்த கடிதத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள அன்சால் பிளாசா என்ற நட்சத்திர ஹோட்டலில் உணவருந்த சென்ற பெண் ஒருவர் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறார். காரணம், அவர் இந்திய பாரம்பரிய உடையான சேலை அணிந்து சென்றதால் அவ்வாறு நடைபெற்றதாகவும் மேற்கத்திய ஆடைகள் அணிந்து வந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படும் என்றும் அவர்களது ஹோட்டல் விதி முறைகள் அவ்வாறு இருப்பதாக கூறியிருக்கின்றனர்.

 இந்தியாவில் செயல்பட்டு வரும் ஒரு ஹோட்டலுக்குள் இந்திய பாரம்பரிய உடை அணிந்து சென்ற பெண்ணை அனுமதி மறுக்க செய்திருக்கும் செயல் வன்மையாக கண்டிக்க கூடியது. உணவகம் என்பது ஒரு பொதுவான இடம். அதில் இந்திய பாரம்பரிய உடையை அணிந்து சென்றவரை தடுத்து நிறுத்தி இருப்பது குறித்து தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

‘‘சேலை  இந்திய பெண்களின அடையாளம்’’  :   ஆவேசமாகி கடிதம் எழுதிய வானதி சீனிவாசன் | Saree Identity Indian Women Vanathisrinivasan

சேலை என்பது இந்திய பெண்களின அடையாளம்.  நமது பாரம்பரிய உடைகளில் அதுவும் ஒன்று. எனவே அந்த ஹோட்டல் நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.