சேலை கட்டி வந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பு - டெல்லி நட்சத்திர விடுதி அராஜகம்
டெல்லியில் புடவை அணிந்து நட்சத்திர விடுதிக்கு வந்த பெண்ணிற்கு விடுதி நிர்வாகம் அனுமதி மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் பண்பாட்டு கலாச்சார உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமான உடைகள் பயன்பாட்டில் உள்ளன.
புடவை இவற்றில் முக்கிய உடையாக பெண்களின் மத்தியில் உள்ளது. இந்நிலையில் தில்லியில் புடவை அணிந்து வந்த பெண்ணுக்கு நட்சத்திர விடுதி ஒன்று அனுமதி மறுத்துள்ளது.
தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. சமூக வலைத்தளத்தில் பரவி வரும் அடையாளம் தெரியாத நபர் பதிவிட்டுள்ள விடியோ ஒன்றில் நட்சத்திர விடுதி பணியாளர் ஒருவர் புடவை அணிந்து வந்த பெண்ணை விடுதிக்குள் அனுமதிக்க மறுக்கும் காட்சிகள் தற்போது பரபரப்பு பேசுபொருளாகியுள்ளது.
மேற்கத்திய ஆடைகளுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும் எனவும், புடவைகளுக்கு அனுமதி அளிக்க முடியாது எனவும் நட்சத்திர விடுதி ஊழியர்கள் தெரிவித்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.