சர்தார் பட நடிகைக்கு கிஸ் கொடுத்த போதை ஆசாமி.. - வைரலாகும் வீடியோ
சர்தார் பட நடிகைக்கு கிஸ் கொடுத்த போதை ஆசாமியின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
‘சர்தார்’ திரைப்படம்
இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், நடிகர் கார்த்தியின் நடிப்பில் ‘சர்தார்’ திரைப்படம் நேற்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் கார்த்தி ஏறு மயிலேறி என்ற பாடல் பாடியுள்ளார். இப்பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சர்தார் பட நடிகைக்கு கிஸ் கொடுத்த குடிமகன்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், விருதுநகர் மாவட்டம் முழுவதும் சர்தார் பட போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. நன்கு குடித்து விட்டு அந்த ஒரு போதை ஆசாமி, தெரு சுவரில் ஒட்டப்பட்டிருந்த சர்தார் பட நடிகை ராஷிகண்ணாவிற்கு வளைத்து வளைத்து முத்தம் கொடுத்தார்.
இவரின் செயலை அங்கு சென்றுக்கொண்டிருந்தவர்கள் வேடிக்கையாக பார்த்துக் கொண்டு சென்றனர். சிலர் இதை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் ரொம்ப முரட்டு அடாவடி குடிகாரனாக இருப்பானோ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.