ஸ்கூல் பாயாக மாறிய சரவணன் அண்ணாச்சி; வைரலாகும் புகைப்படம் - வாயடைத்த நெட்டிசன்கள்
தற்போது சமூகவலைத்தளங்களில் ஸ்கூல் பாயாக மாறிய சரவணன் அண்ணாச்சியின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
“தி லெஜண்ட்”
சமீபத்தில் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், அதன் உரிமையாளர் சரவணன் அருள் ஹீரோவாக நடித்த முதல் படம் “தி லெஜண்ட்” வெளியானது. இப்படத்தில், ஊர்வசி ராவ்டேலா, கீத்திகா, பிரபு, விஜயகுமார், யோகி பாபு, விவேக், கோவை சரளா, நாசர் உள்ளிட்டோர் நடித்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த 28ம் தேதி “தி லெஜண்ட்” படம் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும், உலகம் முழுவதும் சுமார் 2500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக சறுக்கலை சந்தித்தாலும், பாக்ஸ் ஆபீஸில் வசூலை அள்ளியது.
ஸ்கூல் பாயாக மாறிய சரவணன் அருள்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சரவணன் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஸ்லிம்மான லுக்கில் பார்ப்பதற்கு ஸ்கூல் பையனைப் போல் இருக்கும் அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், வயது 50-ஐ கடந்த போது எப்படி இவ்வளவு இளமையாக இருக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.