மனைவியா வருவாங்கனு தெரியாது; அதை அசிங்கப்படுத்த கூடாது - ராதிகா பற்றி சரத்குமார் ஓபன்டாக்!

Sarathkumar
By Sumathi Aug 15, 2023 08:14 AM GMT
Report

ராதிகா மறுமணம் பற்றி சரத்குமார் மனம் திறந்துள்ளார்.

ராதிகா மறுமணம்

நடிகர் சரத்குமார், ராதிகா உடனான மறுமணம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார். அதில், நடிகராக இருக்கம் போது, என்னுடைய காதல் கதைகளை ராதிகாவிடம் நிறைய கூறியிருக்கிறேன்.

மனைவியா வருவாங்கனு தெரியாது; அதை அசிங்கப்படுத்த கூடாது - ராதிகா பற்றி சரத்குமார் ஓபன்டாக்! | Sarathkumar Talks About Actress Radhikaa Marriage

அப்போது அவர் என் மனைவியாக வருவார் என்று எனக்குத் தெரியாது. அவரும் என்னை அப்போது அப்படி பார்க்கவில்லை. என்னை ஒரு நண்பனாக தான் ராதிகா அப்போது பார்த்தார். கிட்டத்தட்ட 7 ஆண்டுகள், நாங்கள் நண்பராக தான் இருந்தோம்.

 காம்ப்ரமைஸ் 

உண்மையான காதல், உண்மையான நட்பு எப்போதும் காம்ப்ரமைஸ் ஆகிவிடும். கடந்த காலத்தை சுட்டிக்காட்டி நாங்கள் சண்டையிட்டதில்லை. திருமணமான பின் உன் மனைவியிடம் கடந்த காலத்தை பற்றி கேட்க கூடாது என்று என் அப்பா என்னிடம் கூறியிருந்தார்.

மனைவியா வருவாங்கனு தெரியாது; அதை அசிங்கப்படுத்த கூடாது - ராதிகா பற்றி சரத்குமார் ஓபன்டாக்! | Sarathkumar Talks About Actress Radhikaa Marriage

உண்மையில் அவர் ஒரு தீர்க்கதரிசி. மனைவியின் கடந்த காலம் தெரிந்தால், என்றாவது ஒரு நாள் நீங்களே அதை தவறி வார்த்தையாக விட்டுவிடுவீர்கள். நானும் ராதிகாவும், எதைப்பற்றியும் பேச மாட்டோம். சமூக வலைதளத்தில் போடுவதை,

நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம். அவன் ஏதோ அதை போட்டு ஜாலியா எடுத்துக்கிறான். அதை போய் நாம் ஏன் கண்டுகொள்ள வேண்டும்? அப்படி போடுபவர்களை அவர்களின் வக்கிரம் என்று தான் நான் நினைப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.