விஜய் ஒரு தலைவனே இல்லை - சரத்குமார் ஆவேசம்
தவெக தலைவர் விஜய் ஒரு தலைவனே இல்லை சரத் குமார் கூறியுள்ளார்.
சரத் குமார் ஆதங்கம்
கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியை நடத்தி வந்த சரத்குமார், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக தனது கட்சியை பாஜகவில் இணைத்தார்.

பாஜக சார்பில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட ராதிகா சரத்குமார் தோல்வியை தழுவினார்.
கட்சியில் சேர்ந்து 2 ஆண்டுகள் ஆகியும் சரத்குமாருக்கு பொறுப்பு வழங்காமல் உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருந்தனர்.
இந்நிலையில், சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய சரத்குமார், அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இதில் பேசிய அவர், " பாஜகவில் எனக்கு எந்த பொறுப்பும் வழங்க படவில்லை. பொறுப்பு இருந்தால்தான் கட்சியில் செயல்பட முடியும் ஒரு உறுப்பினராக என்னால் செயல்பட முடியாது. பாஜக கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை.

நம் நாடு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தேசிய நீரோட்டத்தில் இணைந்தேன். அண்ணாமலை, நயினார் நாகேந்திரனிடம் நாம் பலமுறை கோரிக்கை வைத்திருக்கிறோம். அவர்களுக்கு எதோ தடங்கல் இருக்கிறது. ஆனால், இதற்கு மேல் தாமதப்படுத்தினால் நன்றாக இருக்காது.
உங்களின் அருமையும் பெருமையும் அறிவும் ஆற்றலும் தெரிய வந்த பிறகும் கட்சிப் பொறுப்பு வழங்காதது ஏன் என ஆதரவாளர்கள் என்னிடம் கேட்கின்றனர். திருச்சி பொது கூட்டம் மேடையில் உங்கள் புகைப்படம் கூட இல்லை என ஆதரவாளர்கள் ஆதங்கப்பட்டனர். எனக்கும் ஆதங்கம் உள்ளது.
விஜய் ஒரு தலைவனே இல்லை
நம்முடைய கோரிக்கையை பாஜகவுக்கு தெரியப்படுத்துவோம். அதன்பிறகு முடிவெடுப்போம். அதிமுகவை பாஜக கபளீகரம் செய்யுமா? இல்லையா? என்பது எனக்குத் தெரியாது. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
நானும் என் மனைவியும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. தலைமை சொன்னால் கூட நிற்க மாட்டேன். என்னுடன் பயணித்தவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்ற பட்டியலை கொடுத்துள்ளேன்.
தவெக கட்சி பற்றி எந்த மதிப்பீடும் இல்லை. விஜய் ஒரு தலைவனே இல்லை. 41 பேரை வீட்டிற்கு அழைத்து நீங்கள் துக்க விசாரித்திருக்க கூடாது" என பேசியுள்ளார்.