மீனா பற்றி எப்படி இப்படி பேசலாம்; வரலட்சுமி திருமணம் - கொந்தளித்த சரத்குமார்!
வதந்திகள் குறித்து சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பரவும் வதந்தி
தமிழில் மழை பிடிக்காத மனிதன் படத்தில் சிறப்பு கேமியோ ரோலில் சரத்குமார் நடித்துள்ளார். இந்தப் படம் நாளை வெளியாகவுள்ளது.
இந்நிலையில், அந்த பட புரோமஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், திருமண உறவில் ஏன் விரிசல் வருகிறது. யாருக்கு யாருடன் ரிலேஷன்ஷிப் ஒத்துப் போகிறது. அதற்கான உண்மையான காரணம் உள்ளிட்டவை சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும்.
தேவையில்லாமல், அதற்கு கமெண்ட் செய்வது, மோசமாக பேசுவது எல்லாம் தவறான செயல் எனத் தெரிவித்துள்ளார். அண்மையில், நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார், நிக்கோலாய் சச்தேவை திருமணம் செய்துக்கொண்டார்.
சரத்குமார் கண்டனம்
நிக்கோலாய் சச்தேவுக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது என்று விமர்சனங்கள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, நடிகை மீனா குறித்து சமீபத்தில் சோஷியல் மீடியாவில் படுமோசமாக கிளம்பிய வதந்திக்கு சரத்குமார் கண்டனம் தெரிவிக்கும் விதமாக ட்வீட் போட்டிருந்தார்.
இதுகுறித்து அவர் தொடர்ந்து பேசுகையில், நடிகை மீனா பற்றி எப்படி தப்பா பேசலாம். பேசுபவர்களிடம் ஏதாவது ஒரு ப்ரூஃப் இருக்குமா? இஷ்டத்துக்கு வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுவது ரொம்பவே தப்பு. அரசு நினைத்தால் இவர்களை எல்லாம் ஓவர் நைட்டில் கட்டுப்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளார்.