பொன்னி நதி பாடலை பாடிய நடிகர் விஜய் : சரத்குமார் தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி
பொன்னியின் செல்வனில் வரும் பொன்னி நதி பாடலை விஜய் பாடினார் என நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
பொன்னியின் செல்வன்
கல்கி எழுதி புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் நாவலை பல வருடங்களுக்கு பிறகு திரைப்படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் பெரிய பழுவேட்டரையராக சரத்குமார் நடித்துள்ளார், இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், நடிகர் விஜய் பொன்னியின் செல்வனில் வரும் ‘பொன்னி நதி’ பாடலை அடிக்கடி பாடிக் கொண்டே இருப்பார் என கூறியுள்ளார்.
பொன்னி நதி பாடல்
சரத்குமார், விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார், மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை முதலில் எடுக்க முயன்றபோது விஜய்யை வந்தியத்தேவனாக நடிக்க வைக்க விரும்பினார் என்ற பேச்சு உண்டு.
அதனால் வந்தியத்தேவனாக விஜய்யை எடிட் செய்து பலர் சமூக வலைதளங்களில் கூட பதிவிட்டனர். இந்நிலையில் விஜய்யே வந்தியத்தேவனின் பொன்னி நதி பாடலை பாடியிருப்பது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது