உடல் தேவைக்காக கல்யாணம் பண்ணா அதுதான் நடக்கும் - வரலெட்சுமி தாய் எமோஷனல்!

Sarathkumar Varalaxmi Sarathkumar Divorce
By Sumathi Feb 23, 2024 02:30 PM GMT
Report

சரத்குமாரின் முதல் மனைவி விவாகரத்து குறித்து பேசியுள்ளார்.

 சாயா தேவி

தமிழ் சினிமாவில் 100 படங்களுக்கும் மேல் ஹீரோவாக நடித்தவர் நடிகர் சரத்குமார். அதன்பின் தற்போது அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார். முன்னதாக, 1984ல் சாயா தேவி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

raadhika sarathkumar - varalakshmi

இவர்களது மகள் தான் நடிகை வரலட்சுமி. இருவரும் 2000ல் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். அதன் பிறகு ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார். இந்நிலையில், சரத்குமாரின் முதல் மனைவி அளித்த பேட்டி ஒன்றில்,

ராதிகாவுக்கும் வரலெட்சுமிக்கும் தான் பிரச்சனை; ஆனால் முதல் மனைவி - ரகசியம் பகிர்ந்த சரத்குமார்!

ராதிகாவுக்கும் வரலெட்சுமிக்கும் தான் பிரச்சனை; ஆனால் முதல் மனைவி - ரகசியம் பகிர்ந்த சரத்குமார்!

விவாகரத்து

" திருமணம் செய்து கொள்வதற்கு இதுதான் வயது என்று எதையும் நாம் குறிப்பிட்டு சொல்ல முடியாது. திருமணம் செய்வதற்கு மனதளவில் சரியாக இருக்க வேண்டும். ஆனால் சிலர் தவறான காரணத்திற்காக திருமணம் செய்துகொள்கிறார்கள். திருமணம் என்பது ஒரு நாள் கூத்து கிடையாது.

sarathkumar first wife

திருமணம் என்பது ஒரு பயணம் அதில் நீங்கள் சரியாக பயணிக்க வேண்டும் என்றால் அனைத்து தளங்களிலும் கொஞ்சம் உயர்ந்த நிலையை அடைந்திருக்க வேண்டும்.

சிலர் உடல் தேவைக்காக திருமணம் செய்துகொள்கிறார்கள். அதெல்லாம் உண்மையான திருமணமே கிடையாது. நீங்கள் தவறான காரணத்தால் செய்தால் அது கடைசியில் விவாகரத்தில் முடிய நிறைய வாய்ப்பு இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.  

You May Like This Video