நயினார் நாகேந்திரனுடன் சந்திப்பு; விரக்தியில் சரத்குமார் - இதுதான் பிளானா?
நயினார் நாகேந்திரனை, சரத்குமார் நேரில் சந்தித்து வாழ்த்தினார்.
சரத்குமார்
2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் பாஜகவோடு இணைத்தார்.
முன்னதாக மாநில அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பதவி, ட்சியை சேர்ந்தவர்களுக்கு மாவட்ட மற்றும் மாநில அளவில் பதவிகள் போன்ற உத்தரவாதம் தரப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பாஜகவின் தமிழக தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் கட்சி ரீதியாக முக்கியமான சில நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, கட்சி நிர்வாகிகளை மாற்றவுள்ளார்.
நயினார் பதில்
இந்நிலையில், பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து நேரில் சென்று அவரை வாழ்த்தினார். அப்போது சரத்குமாருக்கு அளிக்கப்பட்ட உத்தரவாதம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு நயினார், கட்சிக்கு தேசிய தலைவர் தேர்வு செய்யப்பட்டப்பிறகுதான் தமிழக பாஜகவின் நியமன பதவிகள் முடிவு செய்யப்படும்.
எதுவென்றாலும் தேசிய தலைமைதான் முடிவெடுக்கும் எனத் தெரிவித்துள்ளார். எனவே சரத்குமார் விரக்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.