வழிவிடுங்க ப்ளீஸ் - நடுரோட்டில் இறங்கிய சரத்குமாரின் வைரல் வீடியோ

viralvideo Actorsarathkumar
By Petchi Avudaiappan Sep 20, 2021 09:38 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

 சென்னையின் பரபரப்பான சாலை ஒன்றில் நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் திடீரென போக்குவரத்தை சரி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் நடிப்பு, அரசியல் என இரண்டு களத்திலும் தன்னை எப்போதும் பிசியாகவே வைத்து கொள்வது வழக்கம். சில தினங்களுக்கு முன்பு கூட அறிமுக இயக்குனர் திருமலை பாலுசாமி இயக்கத்தில் சுஹாசினியுடன் இணைந்து நடிக்கவுள்ள சமரன் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

இப்படத்தில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு அவர் ஹீரோவாக நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனிடையே சரத்குமார் நேற்று சென்னை மத்திய கைலாஷ்பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸ் வாகன நெரிசலில் சிக்கியது. இதனால் அந்த ஆம்புலன்ஸ் போவதற்கு வழி கிடைக்கவில்லை. இதையடுத்து, காரிலிருந்து திடீரென இறங்கிய நடிகர் சரத்குமார், அங்கிருந்த வாகன ஓட்டுனர்களை ஓரமா வாங்க... ஆம்புலன்சுக்கு வழிவிடுங்க என்ற கேட்டுக்கொண்டார். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.