‘ரஞ்சிதமே’ பாடலுக்கு மாஸா நடனமாடிய சரத்குமார் - வைரலாகும் வீடியோ
‘ரஞ்சிதமே’ பாடலுக்கு நடிகர் சரத்குமார் மாஸா நடனமாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
‘வாரிசு’ படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் நடிப்பில் வெளியாகும் படங்களின் முதல் சிங்கிள் பாடல் ரசிகர்களைக் கவர்ந்துவிட்டால் அவை யூ-டியூப்பில் பெரிய சாதனையைப் படைத்து விடும். இவர் பாடலுக்கென்று ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'வாரிசு' படத்தின் முதல் சிங்கிளாக வெளியான 'ரஞ்சிதமே' பாடல் வெளியாகி 24 மணி நேரத்தில் 18.5 மில்லியன் பார்வைகளையும், 1.3 மில்லியன் லைக்குகளை கடந்து சாதனை படைத்தது.
கடந்த 11ம் தேதி வாரிசு திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வசூல் சாதனையிலும் முன்னிலையில் உள்ளது.

மாஸா நடனமாடிய சரத்குமார்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ‘வாரிசு’ படத்தில் இடம் பெற்ற ‘ரஞ்சிதமே’ பாடலுக்கு நடிகர் சரத்குமாரும், அவருடைய மகளும், நடிகையுமான வரலட்சுமியும் மாஸா நடனமாடியுள்ளனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.
Here's how @varusarath5 & @realsarathkumar celebrated the success of #VeeraSimhaReddy & #Varisu / #Vaarasudu ??#VaralaxmiSarathkumar #Sarathkumar #Tollywood #Kollywood #VacationMode pic.twitter.com/wDqzHCRLtZ
— Hyderabad Times (@HydTimes) January 19, 2023
ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
தமிழக முதலமைச்சரின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்தி : தவறாக சித்தரிக்கப்பட்டமைக்கு கண்டனம் IBC Tamil