விஜய் புரிதல் இல்லாமல் பேசுகிறார்; கல்லடி படதான் செய்யும் - சரத்குமார்
விஜய் வீட்டில் எல்லோரும் ஹிந்தி பேசுகிறார்கள் என சரத்குமார் பேசியுள்ளார்.
சரத்குமார்
நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "1996 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியை எதிர்த்து, தனிமனிதனாக அரசியலுக்கு வந்தேன்.
அன்றைக்கு யாருக்கு அந்த தைரியம் கிடையாது. தவெக தலைவர் விஜய் கூறுவது போல் அந்த சமயத்தில் நானும் உச்ச நடிகர்தான்.அதிகமான ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து ஒரு படத்தைப் பார்த்தது என்றால், அது என்னுடைய படத்தைத்தான்.
விஜய்
அப்போதுதான் அரசியலுக்கு வந்தேன். அதற்கு காரணம் மக்கள் சேவை. ஜெயலலிதாவை யாருமே எதிர்க்க முடியாது என்று கூறினார்கள். என் வீட்டில் கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர். மலத்தைக் கரைத்து ஊற்றினார்கள். நான் தனியாக அரசியல் கட்சி துவங்கியபோது, இரு மாபெரும் தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்தேன்.
நீங்கள் எப்போது பொது வாழ்விற்கு, மக்கள் சேவைக்கு வந்து விட்டீர்களோ உங்கள் மீது கல்லடி படதான் செய்யும். தேசிய மொழியாக இந்தி இல்லாவிட்டாலும், அதிகமாக பேசப்படும் மொழி இந்தி, 'இந்தி தெரியாது போடா' என சொல்பவர்களுக்கு நான் கூறுவது 'இந்தி கத்துக்கோ வாடா'.
நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை, ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் ஆளுநர் பதவி குறித்து புரிதல் இல்லாமல் விஜய் பேசி உள்ளார். அம்பேத்கரைக் கொள்கை தலைவராக வைத்த விஜய் அரசியல் சாசனத்தில் உள்ள ஆளுநர் பதவியை எப்படி வேண்டாம் என சொல்கிறார்? உங்களுடைய வீட்டில் எல்லோரும் இந்தி பேசுகிறார்கள். இந்தி படிக்க வேண்டாம், மும்மொழிக் கொள்கை வேண்டாம் என எப்படி சொல்ல முடியும்?" என பேசினார்.