மருத்துவமனை தீவிர சிகிச்சையில் பிரபல நடிகர் - ரசிகர்கள் சோகம்
நடிகர் சரத் பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சரத் பாபு
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சரத் பாபு. சுமார் 40 ஆண்டு காலமாக இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கன்னடா, இந்தி , மலையாள படங்களிலும் நடித்துள்ளார். சினிமா மட்டும் இன்றி தொலைக்காட்சி தொடர்களிலும் சரத்பாபு நடித்துள்ளார்.
இந்நிலையில், சரத்பாபு கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் உடல் நலம் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல் நலம் தேறியதையடுத்து அவர் வீட்டில் ஓய்வில் இருந்தார்.
உடல் நிலை பாதிப்பு
மேலும், தொடர்ந்து உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது அதனையடுத்து ஐதராபாத்தில் உள்ள பிரபல ஏஐஜி மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
உடல் நலனில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
அவர் விரைவில் உடல் நலம் தேறி வீடு திரும்ப வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.