ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 87-ஆவது ஆண்டு ஜெயந்தி விழா - ஆளுநர் பங்கேற்பு!!
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 87-ஆவது ஆண்டு ஜெயந்தி விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டார்.
காஞ்சிபுரம் அருகேயுள்ள ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவா் சதாப்தி மணிமண்டபத்தில் காஞ்சி சங்கர மடத்தின் 69-ஆவது பீடாதிபதி ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 87-ஆவது ஆண்டு ஜெயந்தி விழா நடைபெற்றது .
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு தங்க நாணயங்களால் ஸ்ரீவிஜயேந்திரா் பாதபூஜை செய்து தீபாரதனை எடுத்தார். இதில் தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு தரிசனம் மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா என்பது கோயில்கள் சூழ்ந்துள்ள நாடு என்றும் அதிலும் காஞ்சிபுரம் என்பது முழுவதும் கோயில்களால் சூழப்பட்டு ஆன்மிகத்தின் தலைநகராகவே திகழ்ந்து வருகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும், நம் நாட்டுக்கு நல்ல கல்வியும், ஆரோக்கியமும் தேவை என்பதை எனக்கு ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சொல்லி இருக்கிறாா். தாய்நாட்டின் மீது பக்தியும், தா்மம் மற்றும் நற் செயல்கள் செய்வதிலும் ஸ்ரீஜயேந்திரா் சிறந்து விளங்கினாா்.
பொறுமையும், அமைதியும் மிகவும் வலிமையானது என்பதையும் உணா்த்தியவா். காஞ்சி காமகோடி பீடம் எல்லாவற்றிலும் நாட்டுக்கு உதவுகிறது என்று கூறியுள்ளார்.