சசிகலாவை நோக்கி அதிமுக வரும் - சி.ஆர்.சரஸ்வதி நம்பிக்கை

sasikala ammk aiadmk Saraswathi
By Jon Mar 30, 2021 02:12 AM GMT
Report

கடந்த பிப்ரவரி மாதம் தமிழகம் வந்த சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவேன் எனத் தெரிவித்திருந்தார். அதற்கு ஏற்ப தான் அவருடைய நகர்வுகளும் இருந்தன/ இந்நிலையில் மார்ச் 3-ம் தேதி சசிகலா அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அம்மாவின் உண்மையான தொண்டர்கள் ஓர் அணியாக செயல்பட்டு தீய சக்தியான திமுகவை வீழ்த்த வேண்டும் என அதில் தெரிவித்திருந்தார்.

இதனால் அமமுக நிர்வாகிகளும், அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் கடும் அதிருப்தியடைந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் அதிமுக - அமமுக இணைப்பும் காணல் நீரானது. இதனைத் தொடர்ந்து அமமுக தேமுதிக உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் சசிகலாவை சந்தித்த அமமுகவின் செய்தி தொடர்பாளர் சி ஆர் சரஸ்வதி, “விரைவில் அதிமுக, சசிகலாவை நோக்கி வரும் என்றும் ஜெயலலிதா எப்படி பாகூர் முதல் ஆர் கே நகர் வரை போட்டியிட்டு வென்றாரோ அதுபோல தினகரனும் கோவில்பட்டியில் வெல்வார்” எனக் கூறியுள்ளார்.