நயன்தாரா குறித்த ரகசியங்கள் உடைத்த சரண்யா - வாய் பிளக்கும் ரசிகர்கள்
நயன்தாரா குறித்த சில தகவல்களை நடிகை சரண்யா பொன்வண்ணன் பகிர்ந்துள்ளார்.
நயன்தாரா
ஹீரோக்களுக்கு இணையாக ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு தன்னுடைய திறமையால், உழைப்பால் உயர்ந்தவர் நடிகை நயன்தாரா. ஐயா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அதன்பின்னர், சந்திரமுகியில் சூப்பர் ஸ்டாருடன் நடித்தார்.
பின்னர், விஜய், சூர்யா, அஜித், விஷால், சிம்பு, உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையானார்.கடந்த ஆண்டு, அவரது நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு கொண்டார். இவர்களுக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
சரண்யா தகவல்
நடிப்பில் கவனம் செலுத்தி வந்தாலும், குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதில் இருவருமே தவறுவதில்லை. இந்நிலையில், கோலமாவு கோகிலா படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்த சரண்யா பொன்வண்ணன் பேட்டி ஒன்றில், நம்பர் ஒன் நடிகையாக இருந்தாலும் நயன்தாரா மிகவும் சாதாரணமாகவே பழகுவார்.
எந்த பந்தாவும் இருக்காது. தன்னை யாராவது எதிரியாக நினைத்தால் அவரிடம் இருந்து ஒதுங்கிவிடுவார். அதற்கு காரணம் அகங்காரம் இல்லை. அவர்களை சமாளிக்க முடியாது என்று ஒதுங்கிவிடுவார். நயன்தாரா யாரிடமாவது பேசுவதை தவிர்த்தால் அவர் நிச்சயம் கெட்டவர் தான். நயன்தாரா தன்னை பற்றி தவறாக பேசுவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது இல்லை.
இருக்கும் வேலையை எல்லாம் விட்டுவிட்டு தன்னை பற்றி பேச அவர்களுக்கு நேரம் இருக்கிறதே என நினைத்துக்கொள்வார். நெகட்டிவ் எனர்ஜி எதற்கு என தன்னை பற்றி மோசமாக பேசுபவர்களை கண்டுகொள்வது இல்லை எனத் தெரிவித்துள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் வியந்துள்ளனர். தற்போது நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் 75 படத்தில் நடித்து வருகிறார்.