சாராவுடன் டேட்டிங்கில்... தொடர் சர்ச்சையில் சுப்மான் கில்!
சாரா அலிகானும், பிரபல கிரிக்கெட் வீரர் சுப்மான் கில்லும் ரெஸ்டாரன்டில் இருக்கும் ஃபோட்டோ வைரலாகியுள்ளது.
சாரா டெண்டுல்கர்
இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் சுப்மான் கில் ஏற்கெனவே சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கரை காதலித்து வருவதாக கூறப்பட்டது. இதனைக் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தும் விதமாகவும் இருவரது இன்ஸ்டாகிராம் பக்க பதிவுகள் இருந்தது.
ஆனால், சில காரணங்களால் தற்போது இந்த ஜோடி பிரிந்துவிட்டது. தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அத்ராங்கி ரே படத்தில் நடித்தவர் சாரா அலி கான். இவர் பிரபல நடிகர் சைஃப் அலி கானின் மகள் ஆவார்.
கிரிக்கெட் வீரர் சுப்மான் கில்
கடந்த 2018-ம் ஆண்டு வெளியான கேதார்நாத் படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். சிம்பா, லவ் ஆஜ் கல், அத்ராங்கி ரே உள்ளிட்ட படங்களில் கவனம் ஈர்த்தார் சாரா. தற்போது 2 படங்களில் சாரா நடித்து வருகிறார்.
இந்நிலையில், சாராவும், பிரபல கிரிக்கெட் வீரர் சுப்மான் கில்லும் ரெஸ்டாரன்டில் இருக்கும் ஃபோட்டோ வைரலாகியுள்ளது. இதனால் இருவரும் டேட்டிங் செய்கிறார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சாரா அலிகான்
அதனைத் தொடர்ந்து, கடந்த செப்.8-ம் தேதி சுப்மான் கில் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார், அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக குஷ்ப்ரீத் பதிவிட்ட இன்ஸ்டாகிராமில் ‘பகுத் சாரா பியார்’ என்கிற தலைப்பில் சில வரிகளை பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சுப்மான் கில் மற்றும் சாரா அலிகான் இருவரும் காதலித்து வருவதாக கருதினர், இந்த பதிவு வைரலானதும் கில்லின் நண்பர் குஷ்ப்ரீத், தனது இன்ஸ்டாகிராம் கணக்கை தனிப்பட்ட கணக்காக மாற்றிவிட்டார்.
முன்னதாக சுஷாந்த் சிங் ராஜ்புத், கார்த்திக் ஆர்யன் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைத்து சாரா அலி கான் பேசப்பட்டார். விஜய் தேவரகொண்டா தனக்கு க்ரஷ் என்று சாரா சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் சுப்மன் கில், சாரா அலி கான் ஃபோட்டோ இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.