தனுஷூடன் நெருக்கம் காட்டும் பிரபல பாலிவுட் நடிகை... வைரலாகும் புகைப்படங்கள்!

Dhanush Gossip Today Bollywood Viral Photos
By Sumathi Jul 24, 2022 10:13 AM GMT
Report

தி கிரே மேன் படத்தின் இயக்குனர்கள் ரூஸோ சகோதரர்கள் கொடுத்த பார்ட்டியில் நடிகர் தனுஷ் உள்பட ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

நடிகர் தனுஷ்

தனுஷ் நடித்த தி கிரே மேன் என்கிற ஹாலிவுட் படம் வெளியாகி உள்ளது. இப்படத்தில் அவிக் சான் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரூஸோ சகோதரர்கள் இப்படத்தை இயக்கி உள்ளனர்.

தனுஷூடன் நெருக்கம் காட்டும் பிரபல பாலிவுட் நடிகை... வைரலாகும் புகைப்படங்கள்! | Sara Ali Khan Latest Pics With Dhanush

மேலும், டோலிவுட்டில் வாத்தி, தமிழில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன், கேப்டன் மில்லர் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார் தனுஷ். இதில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் ஷூட்டிங் முடிந்து விரைவில் ரிலீசாக உள்ளன.

 விவாகரத்து

இவ்வாறு சினிமா வட்டாரத்தில் முன்னனியில் வலம் வரும் தனுஷ், கடந்த ஜனவரி மாதம் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை அளித்தது.

தனுஷூடன் நெருக்கம் காட்டும் பிரபல பாலிவுட் நடிகை... வைரலாகும் புகைப்படங்கள்! | Sara Ali Khan Latest Pics With Dhanush

நடிகர் தனுஷ் நடிகைகளுடன் நெருக்கம் காட்டியது பிடிக்காததால் தான் ஐஸ்வர்யா அவரை பிரியும் முடிவுக்கு வந்ததாகவும் ஏராளமான செய்திகள் பரவின. இந்நிலையில், நடிகர் தனுஷுடன் பிரபல பாலிவுட் நடிகர் சையிப் அலி கானின் மகளும், நடிகையுமான சாரா அலி கான் நெருக்கமாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

சாரா அலி கான்

தனுஷ் நடித்த கிரே மேன் படத்தின் இயக்குனர்கள் ரூஸோ சகோதரர்கள் சமீபத்தில் இந்தியா வந்திருந்தனர். அப்போது அவர்கள் ஒரு பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அதில் ஏராளமான பாலிவுட் நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர். சாரா அலிகானும் அதில் கலந்துகொண்டார்.

அவர் நடிகர் தனுஷுடன் தான் அந்த பார்ட்டிக்கு வருகை தந்தார். தனுஷின் கையை பிடித்தவாரு வந்த சாரா அலிகான், போஸ் கொடுக்கும்போது கூட அவரது கையை விடவில்லை. தனுஷும் சாரா அலிகானும் கடந்தாண்டு வெளியான அட்ராங்கி ரே என்கிற பாலிவுட் படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.