என் அந்தரங்க உறுப்புகளை தொட்டு தாக்கினார்கள்.... - பிருத்வி ஷா மீது நடிகை பகீர் புகார்...!
என் அந்தரங்க உறுப்புகளை தொட்டு தாக்கினார்கள் என்று பிரபல கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா மீது நடிகை சப்னா கில் பகீர் புகார் தெரிவித்துள்ளார்.
பிருத்வி ஷாவின் செல்பி வழக்கு
கடந்த பிப்ரவரி 15ம் தேதி அன்று இரவு மும்பையில் உள்ள ஹோட்டலுக்கு வெளியே சப்னா கில் மற்றும் அவரது நண்பர்கள் ப்ரித்வி ஷாவுடன் செல்ஃபி எடுப்பதற்காக முயற்சி செய்தனர்.
அப்போது பிரித்வி ஷா மறுத்ததால், சப்னா கில்லும், அவரது நண்பரும் பிருத்வி ஷாவின் காரைத் தாக்கினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பிருத்வி ஷாவின் நண்பர் ஆஷிஷ் சுரேந்திர யாதவ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரையடுத்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் (143, 148, 149, 384, 437, 504, 506) பல்வேறு பிரிவுகளின் கீழ் மும்பை போலீசார் வீரர் சப்னா கில் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பிருத்வி ஷா செல்பி வழக்கில் சப்னா கில் உட்பட 3 பேருக்கு மும்பை நீதிமன்றம் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.
பிருத்வி ஷா மீது வழக்கு
இந்நிலையில், இவ்வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி சப்னா கில் அந்தேரி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை விசாரித்த அந்தேரி நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
பிருத்வி ஷா மீது நடிகை பகீர் புகார்
வெளியே வந்த சப்னா கில் உடனேயே பிருத்வி ஷா மீது காவல் நிலையத்தில் வழக்கு தொடுத்தார்.
அந்த வழக்கு மனுவில், கிரிக்கெட் வீரர் குடிபோதையில் இருந்ததாகவும், தன்னை மானபங்கப்படுத்தியதாகவும் சப்னா கில் அதில் தெரிவித்திருந்தார். மேலும், அளவுக்கு அதிகமான மதுபோதையில் இருந்த பிரித்வி ஷாவும், அவரது நண்பர்களும் என் நண்பரை துன்புறுத்தினர். இதனை தடுக்க சென்ற என்னையும் தகாத வார்த்தைகளில் பேசினார்கள்.
தகாத முறையிலும் சீண்டிப்பார்த்தனர். கிரிக்கெட் வீரர் எனது அந்தரங்க உறுப்புகளை தொட்டு தாக்கினார் என்று குற்றம் சாட்டினார். நாங்கள் யாரையும் அடிக்கவில்லை, பணம் கேட்கவில்லை. எங்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்.
நான் செல்பி எதுவும் எடுக்க முயலவில்லை. என் நண்பர் வீடியோ எடுக்க முயன்றார். ஆனால் அவர்கள் அவரை தாக்கினார்கள். என் நண்பரைக் காப்பாற்ற முயற்சி செய்தேன். அவர்கள் என்னை பேஸ்பால் பேட்டால் அடித்தார்கள். 2 பேர் என்னை அடித்தனர் மற்றும் எனது அந்தரங்க உறுப்புகளைத் தொட்டார்கள் குறிப்பிட்டுள்ளார்.