ஜன்னலோர இருக்கைக்காக விமானத்தில் பெண்களிடையே பயங்கர மோதல் - வைரல் அதிர்ச்சி வீடியோ...!

Viral Video Flight
By Nandhini Feb 06, 2023 07:41 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ஜன்னலோர இருக்கைக்காக விமானத்தில் பெண்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்,

பிரேசில் போயிங் 737 விமானம் பிரேசிலின் சால்வடார் விமான நிலையத்திலிருந்து சாவ் பாலோ விமான நிலையத்திற்கு புறப்பட தயாராக இருந்தது. அப்போது, விமான பயணிகளுக்கு இடையே பயங்கர சண்டை ஏற்பட்டது.

விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்படும் முன்பே பயணிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஜன்னலோர இருக்கைகாக பயணிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் பிறகு மோதலாக வெடித்தது.

10 பேர் குடும்பத்துடன் பயணித்த பயணி ஒருவர் ஊனமுற்ற குழந்தையின் தாயினால் தாக்கப்பட்டிருக்கிறார். சிறிது நேரத்தில் இரு பயணிகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டை 10 மற்றும் 5 பேர் கொண்ட இரு குடும்பங்களுக்கு இடையே சண்டை போட்டுக்கொண்டனர்.

ஒருவரையொருவர் அவதூறான வார்த்தைகளை பேசி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனையடுத்து, பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டனர்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்து நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.     

sao-paulo-airport-fight-viral-video