"ரகிட..ரகிட" பாடல் செய்த மாயம்: சந்தோஷ் நாராயணன் மகிழ்ச்சி
நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் அனைத்துப் பாடல்களும் இன்று வெளியாகியுள்ள நிலையில் அவை உருவான விதம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் விளக்கமளித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'ஜகமே தந்திரம்' . ஆன்லைன் ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் ஜூன் 18 ஆம் தேதி இந்த படம் நேரடியாக ஒளிபரப்பாகிறது.
ஏற்கனவே படத்தின் ‘ரகிட ரகிட’, ‘புஜ்ஜி’, ’நேத்து’ ஆகிய 3 பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டான நிலையில், இன்று 'ஆல ஓல’ பாடலும், 'தீங்கு தாக்கா’ பாடலும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் படத்தின் ஒவ்வொரு பாடலையும், மிகப்பெரும் உழைப்பில், அதிக நேரம் செலவழித்து உருவாக்கியதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக "ரகிட ரகிட" பாடல் வெளியான போது பலர் தங்களை மன அழுத்தத்திலிருந்து அப்பாடல் மீட்டதாக கூறியது பெரும் மகிழ்ச்சியை அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.