‘சுனிதாவை தான் கல்யாணம் செஞ்சிப்பேன்...’ – சந்தோஷ் பிரதாப் ஓபன் டாக்.. - ரசிகர்கள் ஷாக்

2 மாதங்கள் முன்

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிதான் குக்கு வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் பத்து போட்டியாளர்கள், பத்து கோமாளிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து, ஒருவராக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக சந்தோஷ் பிரதாப் வெளியேற்றப்பட்டார்.

வந்ததில் இருந்தே நன்றாக சமைத்துக் கொண்டிருந்தார். இவருடைய சமையலை வெங்கட் பட், தாமு ஆகியோர் மிகவும் பாராட்டி வந்தனர்.

இந்நிகழ்ச்சியில் கோமாளியாக வந்த சுனிதா இவர் மேல் ஒரு கிரஷுடனயே சுற்றி சுற்றி வந்தார். இவர்கள் இருவரையும் டிவியில் பார்ப்பதற்கு அழகாக உள்ளது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர்.

நிகழ்ச்சியைவிட்டு வெளியே வந்த சந்தோஷிற்கு புதிய படவாய்ப்புகள் தேடி வந்தது. இதனையடுத்து, தற்போது திரிஷாவுடனும் ஒரு படம் கமிட் ஆகியிருக்கிறார்.

சமீபத்தில், செய்தி சேனலில் பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில் தொகுப்பாளர், “உங்களை ரோஷினி ஹரிப்பிரியன் மற்றும் சுனிதா இவர்களில் ஒருவரை திருமணம் பண்ணிக்க சொன்ன யாரை பண்ணிப்பீங்க” என்று கேட்டார். அதற்கு சந்தோஷ், ரோஷினி என் ஃபிரண்ட், அதனால, சுனிதா தான் என் சாய்ஸ் என்று சொன்னார்.

தற்போது இது குறித்த தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

‘சுனிதாவை தான் கல்யாணம் செஞ்சிப்பேன்...’ – சந்தோஷ் பிரதாப் ஓபன் டாக்.. - ரசிகர்கள் ஷாக் | Santhosh

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.