3 முறை கருக்கலைப்பு: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தாய் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு!
நடிகை புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் தாய் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு
கடந்த அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இவர் தன்னை திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி ஏமாற்றி 3 முறை கருக்கலைப்பு செய்ததாக திரைப்பட துணை நடிகை சாந்தினி போலீசில் புகாரளித்திருந்தார்.
புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. தொடர்ந்து விடுதலை செய்யப்பட்டார்.
வழக்குபதிவு
இந்நிலையில், நடிகை ராமநாதபுரத்தில் உள்ள மணிகண்டன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது அம்மா உள்ளிட்ட உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவரை தாக்கியுள்ளனர். இதுகுறீத்து சாந்தினி புகார் அளித்தார். அதன் அடிப்படையில்,
மணிகண்டன் தாயார் அன்னக்கிளி, உறவினர்கள் ரகுபதி, ஜெய வீர் குரு, விக்னேஷ், ராஜா, சென்னை சேர்ந்த ராமநாதன் ஆகியோர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது. மணிகண்டன் வீட்டில் வேலை செய்யும் ஜெயவீர் ராஜகுரு புகாரின் அடிப்படையில் சாந்தியின் மீது ராமநாதபுரம் பஜார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.