நா அந்த ராமசாமி இல்ல - சீண்டும் சந்தானம்..! கொதித்தெழுந்த பிடிஆர் - வைரலாகும் வீடியோ!

Santhanam Periyar E. V. Ramasamy Palanivel Thiagarajan
By Karthick Jan 16, 2024 09:41 AM GMT
Report

சந்தானம் வீடியோ

வடுக்கப்பட்டி ராமசாமி என்ற படத்தில் நடித்துள்ள சந்தானம், அந்த படத்தில் பெரியாரை குறித்து வசனம் ஒன்றை பேசியுள்ளது பெரும் வைரலாகி கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

பெரியாரை பின்தொடரும் இணையதள வாசிகள் கடுமையாக சந்தானத்தை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், தான் தமிழ்நாடு அமைச்சர் பிடிஆர் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.

பிடிஆர் வீடியோ

அந்த வீடியோவில் அமைச்சர் பிடிஆர், ஜக்கி வாசுதேவன், சந்தானம் போன்றவர்கள் தீய சக்தியாக தான் கருதுவதாக குறிப்பிட்ட அவர், மத நல்லிணக்கத்தை உடைத்து சமுதாயத்தில் மத கலவரத்தை உருவாகும் தீய சக்திகள் இவர் என பேசியிருக்கின்றார்.

டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள "வடுக்கப்பட்டி ராமசாமி" படத்தில் மேகா ஆகாஷ், ஜான்விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, என பலர் நடித்துள்ளனர் படம் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.